Sunday, July 26, 2009

நினைவுகள்
--------
ஆலமரத்தின் சலசல ஓசையை
வடி கட்டி எடுத்தது இசையின் நரம்பு
தனிமையின் ஏக்கமும்
மடிந்து கிடக்கும் நெற்கதிர்களும்
முற்றத்து மாமரங்களில்
சிதறி விழுந்த மாம்பழங்களும்
அமைதியாய் கிளைகளில்
தூங்கும் பறவைகளும்
கொக்குவில் ஜயனார் கோவிலும்
சுற்றிவந்த மஞ்சவனப்பதி முருகன் வீதிகளும்
கால் நடையில் சென்று வணங்கிய..
நல்லுர் கந்தனும்
சுதுமலை அம்மன்கோவிலும்
தெல்லிப்பலை துர்கா தேவியும்
மானிப்பாய் மருதடி விநாயகரும்
இனுவில் கந்தசாமி ஆலயமும்
உடுவில் கற்பா விநாயகர்
ஆலயங்களில் பார்த்து மகிழ்ந
பூங்காவனமும்
இதயத்தில் அமர்ந்து
கண்ணீர் சிந்துகின்றது.

அன்னார்ந்து பார்க்கும்
தென்னமரங்களில்அணிலின்
அட்டகாசடமும்
மரங்கொத்தியின் தாளங்களும்
மல்லிகைப்பந்தலின் வாசணையும்
முத்தமிடும் றோஜா தோட்டமும்.
எத்தனை அழகு நம் நாட்டில்
என்ன இல்லை நம் நாட்டில்
என்ன உண்டு இந்த நாட்டில்
இத்தனை வசந்தங்களை..
நினைக்கும் போது
கண்களில் கண்ணீர் திரை கட்டுகின்றது:



இறைவன்
---------
கருணையில் உள்ளத்திலும்
குழந்தையின் உதட்டிலும்
கொடுக்கும் கரங்களிலும்
தாயின் கருவறையிலும்
இரக்கமுள்ள இதயங்களிலும்
தடுமாறும்நிலையில்...
கைகொடுக்கும்கரங்களிலிலும்
இறைவனை கானலாம்.
---------

வீழ்ச்சி
--------
கோபத்தால் அறியாமை தோன்றும்

அறியாமையாயல் நிலை தடுமாறும்
நிலை தடுமாறினர் விவேகம் குறையும்
விவேகம் குறைந்தால்

தன்னிலையில் இருந்து
வீழ்ந்து போகின்றான்.

உழைப்பின் உயர்வு.
---------------
உண்மையின் உழைப்பில்
இன்பம் பெறலாம்
தூங்கபவன் பின்நோக்கி..
செல்லகின்றான்
செய்யம் தொழில் பக்தி
இருந்தால்உயர்வு என்பதில்
உறுதி காண்பான்

.தோல்வியின் பாதையில்
விதைகள் முளைத்திடும்
தோற்றவர் மீண்டும்
வெண்றிட முடியும்
துயரங்கள் கரைந்திட
துணிச்சல் பெருகும்
நாட்கள் கடந்தாலும்
நம்பிக்கை பிறக்கும்
உயர்வான உழைப்பில்
நிச்சயம் வெல்வீர்.
--------------

பெறாமை
--------
தன்னிலை மறக்கடித்து
தாபத்தில் தள்ளிவிடும்
மனதில் தீ எழுந்து...
எரியூட்டி வாடவைக்கும்
கண்முன்னே காண..
இன்பங்கள் பல இருந்தும்
பிறர் நலம் கண்டு
பொறுக்காதுபொங்கி எழும்
எண்ணாத எண்ணம் எல்லாம்
உள்ளத்தை தொட்டுவிட
புண்ணான மனதினில்
ஈட்டியை ஏவவிடும்
பொறுப்புக்களை மறக்கடித்து
பொல்லாப்பு கேட்கவைக்கும்
பொறுமையுடையவனை
தன்வசம் ஆக்கிவிடும்
மாற்றான் பொருள்
மீதுபொறாமை என்னும்...
தீ மூட்டி பேரழிவை.
சேர்த்து விடும்.

kavithaikuyil
rahini

------
நிஜம்
------
சென்ன வார்த்தை தவறாமல்

நிலை நாட்டுபவனும்
வாழ்க்கை எனும் சொல்லுக்கு
வாழ்ந்து காட்டியவனும்.
நீதி வழி நடந்து நேர்மையின்..
இலக்கணமாய்...
நெறியான வாழ்வுதனை
நேர்படவேவாழ்ந்தென்றும்
வையகத்துள் வாழும் முறைதனை
பிறர்குணர்த்தி
உய்விக்கும் மனிதனே
நிஜமான மனிதன்.

-------

மாற்றப்பட வேண்டும்.
-----------------
இன்பங்கள் இற்றுப் போயின

நியாயங்கள் நெலிந்தன
நேர்மைகள் தொலைந்தன
சத்தியம் சரிந்தன
வாய்மை தவறின
மனச்சாட்சி மரித்தன
மாற்றப்பட வேண்டும்
மாறுதலுக்கல்ல
சத்தியத்தின் உணர்வகளுக்கு.

kavithaikuyil
rahini
-------
பார்வை
------
சிந்தித்து செயல் பட முடியாத
மானிடதடுதின்
மாறுபட்ட வேஷம் தான்..
தடுமாற வைக்கின்றது
நடை முறையில் உத்தமரும்
சொல் நடையில் சத்தியவானும்
செயல் முறையில் கர்ணணும்
வெளி வேஷம் போடும் மானிடர்களிடம்
நிஜ முகத்தை பார்வையிட முடியமா..?
என்றும்.

kavithaikuyil
rahini

No comments:

Post a Comment