Friday, July 24, 2009


கூட்டுப்புழு
------
அடைமழைக்குள் கூட்டுப்புழுவாய்
வாழ்கின்றது..
இந்த மானசீக்காதல்
பெய்யும் மழையில்
கால் நனைத்திட துடிக்கும்...
பாதம்கண்டு....நினைவுகள்..
கூடகண்ணீராய் கரைந்தோடுகின்றது
வெள்ளத்தோடு வெள்மாய்.
----
தந்தை தாய்
----------
சுவைத்த தமிழை கவிதைகளால்
அள்ளிக்கொடுத்தேன்.
வானத்தை விட அதிகமாய்
என்னை என் பொற்ரோர்
ஈன்றெடுக்காவிட்டால்
இன்று எனக்குள்
இன்பமழை பொழியுமா..?
இல்லை உங்கள் முன்..
இந்தக் கவிக்குயில்
கூவத்தான் முடியுமா..?
நன்றி சொல்லித்தீராதமகளாய்
விம்மி அழுகின்றேன்
விண்ணுலகம் சென்றதனால்.

----
நேரம் இல்லை.
------
உனக்கு கவிதை எழுத..
எனக்கு நேரம் இல்லை
உன்னுள் என்னை..
தொலைத்துக்கொண்டதால்.

சூரியன்
-----
நான் உன்னை அழைப்பதற்கு
நீ என்னும் பாஸ்போட் எடுக்கவில்லையே!
வசப்பட்ட காதல் மனது
எத்தனை காலம் சென்றாலும்
உன்னை வந்தடைவது நிச்சியம்

அதுவரை...

எனக்குநீ தரும் இசையில்
நான் குளிர்காய்வதும்
உனக்கு நான் தரும் இசையில்
நீ.. குளிர்காய்வதுமாய்
இருவரும் வாழ்வோம்

என்றால்...
தடை போட்டது காலம்!!!!
மீண்டும் வருமா..?
இந்த சூரிய வொளிச்சம்.
உனது குரலை கேட்டிட.
-----
காலம்.
------
இந்தப் பிரபஞ்சத்தில்

எத்தனை பூஞ் சோலைகள்
அமைக்கப் பட்டிருக்கின்றன
அதில் ஒன்றை கூட
நான் ரசித்து செல்லமாய்..
துள்ளி விளையாட
இன்னம் காலம்
இடம் கொடுக்கவில்லை.
---
உனது இசை
-------
இரவுப்பொழுதில் நீ..சிந்திய

இசைகளை
ஒவ்வொருநாளும் நான்

அருந்திக்கொண்டு இருக்கின்றேன்.
உனது இசைகளை
கேட்கமுடியாத போது





No comments:

Post a Comment