Wednesday, July 22, 2009

இருள்
--
பகலை நினைத்து சந்தோசம்
கொண்டதும் இல்லை
இரவை நினைத்து
நிம்மதி கொண்டதும் இல்லை
நான் உருவாகியது
இருள் அறைக்குள்
அதனால்..
இரவை தேடி செல்வதும்
இல்லை
பகலை தேடி வந்ததும் இல்லை
இரண்டும் ஒன்றதான்.
---
மது
--
அருவியில் அள்ளிக்குடி என்றேன்!
ஆற்றில் அள்ளி குடி என்றேன்!
கிணற்றில் அள்ளி குடிஎன்றேன்!
உப்பாக இருந்தாலும் கடலில் அள்ளி குடி என்றேன்!
நீயோ...
பாட்டிலில் இருப்பது பழரசம் எனநினைத்து
நீ.. மதுரச´´த்தை அருந்தியது
என் தவறா..?இல்லை உன்தவறா..?

------
விழிகள்
------
சந்திகாத நட்பின்ஆழத்தின் பார்வை யில்
சந்தித்தும் கிடைக்காத அன்பின் துயரத்தில்
சிந்தித்தும் தோற்றவிட்ட காதல் வலிகளில்
கண்ணீர் மையால் எனது விழிகள்
கதை எழுதி போடுகின்றது .

தடுமாற்றம்.
----
பகல் இரவாகி தடுமாறுகின்றது சில ஞாபகங்கள்!

வீழ்ந்து மடிகின்றது உனது நினைவுக் கதிர்கள்!
மெதுவாக யன்னலை திறந்து பார்தால்!
சூரிய வொளிச்சம் கண்ணை பிழிந்தெடுக்கின்றது!
உனது நினைவுகள் அதகமானதால்..
பகலா..இரவா..என்ற நிலையை..
தடுமாற வைப்பதுதான் காதல்

----
உள்ளத்தை ஆழும் கொடிய நோய்

பார்க்கும் இடமெல்லாம்...
சொர்க்கத்தின் ப்ரம்மையின் நிலை...
தமிழுக்க தேடும் புதிய வரிகளின்...வர்ணணைகளில்
ஆட்கொள்ளும் வசனங்கள்..
கொண்டதுதான் இந்த காதல் நிலை.


முத்து.
---
நீ.. இதுவரை சிந்திய
இசை முத்துக்களை..
நான் கொஞ்சம் கொஞ்சமாக....
அருந்திக்கொண்டு இருக்கின்றேன்.
---
கவிதை
---
கவிதை என்னை அறிய முன்
கவிதையாகவந்தேன் உன்னிடத்தில்
நீ வாசித்து விடுவதற்குள்
நழுவிச்செல்கின்றதுகால்கள்.

தாமரை
---
உன்னை சந்திகாத பொழுதுகள் எல்லாம்
நான் வாடிய தாமரை
--
காதல்
----
நொடிப்பொழுதில்.காற்றலையில்
உன் குரல் கேட்டு
ஏற்பட்ட காதலுக்கு கவிதை எழுதி எழுதி!!
வீட்டு மேசையில் பேப்பர்
உயர்ந்து கொண்டேபேகின்றது.
ஆனால்!!
நம் காதல் மட்டும்
என்னும் உயரவே இல்லை.
----
றணங்கள்
----
இதயம் வலிக்கின்ற
தரணங்களில் எல்லாம்
உன்னிடம் செல்வதில்லை
உனது இதயமாவது
றணங்கள் இல்லாது
இருக்கட்டும் என்று
,
---
முத்தம்
--
இருவரும் பரிமாறிக்கொள்ளும்
முத்தங்களை பெற்று
இன்பம் காண்கின்றது..
தொலை பேசி.

---
இசை
---
பூங்காவணத்துக்குள்
ஒருபூங்காவனமா..?

என்ற கேள்விக்குள்
வஞ்சிக்கப்பட்ட வாழ்வின்

உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன்
வார்த்தைகளால் அல்ல

இசையால்.

2 comments:

  1. "சந்திகாத நட்பின்ஆழத்தின் பார்வை யில்
    சந்தித்தும் கிடைக்காத அன்பின் துயரத்தில்
    சிந்தித்தும் தோற்றவிட்ட காதல் வலிகளில்
    கண்ணீர் மையால் எனது விழிகள்
    கதை எழுதி போடுகின்றது ."

    மிக ஆழமான சிந்தனை.. என்னை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று....

    மிக அருமை...

    ReplyDelete