Friday, August 14, 2009






காதல் விழா
----------

தேனும் பாலும் உண்டு மகிழ
தேவன் உன் தரிசனம் வேண்டும்
காதல் விழா கொண்டாடி
கவியங்கள் பலபடைப்போம்
உல்லாசமாய் வானம் சென்று
தனிமையில் இன்பம் காண்போம்.
-------

தூரம்
------
பலமயில்களுக்கு அப்பால்
நீ.. இருந்தாலும்
நமது காதலை அழியாத
சுவடுகாளாக்கிக்கொண்டோம்.
--------
தாலி
------
காதல் என்பது கழுத்தில் தொங்கும்
வேலியல்ல
மனதில் தொங்கும் தாலி
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
இருவர் ஒருவாராகி
ஒன்றாய் கலந்து
இன்பத்தில் தவன்று
இதயத்தில் எழுதப்படும் காதலே
உயர்வானது.

-----
என் இளவரசன்
----------------
இந்த இளவரசியின் இதயம்
என்ற மாளிகையில்
இளவரசனாய் குடிபுகுந்தாய்
கெஞ்சிக்கேட்டேன் அஞ்சகின்றாய்
கொஞ்சிக்கேட்டேன் மிஞ்சிவிட்டாய்
--------
என் அமுதே

அமுதே உன்னோடு இனைந்திருக்க
இனிய பொழுதாய் நீ
வருவாயா..?
வானவில்லை போர்வையாக்கி
வெப்பத்தை அனைத்திடலாம்.
--------
உன்வரவு
------

நமது வாழ்வில் கிடைக்காத
இன்பத்தை பெற்றுத்தந்தது
நமது காதல் காதல்
இதுவரை இனிப்பான தேனும் கசப்பானது
உன் வரவுக்கு பின்புதான்
கசப்பானவாழ்வு இனிப்பானது.
------
இருவர் ராசியும்
---------
சுபதினத்தில் சுகமாக வந்தாய்
கண்கள் இரண்டில் கனிவோட கலந்தாய்.
காலம் முழுதும் இனிப்பாக பேசினாய்
நம் காதலையும் காவியமாக்கினாய்
இதனால் இருவர் ராசியும் ஒன்றானாதால்
அழியாத புகழ்பொற்றோம் இவ்வுலகில்
---------

---------------
என் கவிதை நீ
---------------

வானம் சோகம்கொண்டதால்
பூமாதேவி மடியில் விழுந்து கண்ணீர்சிந்துகின்றது
மழையாக
நான் உன்மீது கொண்ட காதலால்
பார்க்துடிக்கும் என்விழிகள்
கவிதை மழை பொழிகின்றது
காற்றலையில்
உலகமே கேட்டு ரசிக்கின்றது
நீ கேட்க முடியவில்லை
காரணம்
உனது உல்லத்தில் கன்னியாக
நான் இருக்கின்றேன்
உனது இல்லத்தில்கணணி
இல்லை

உன் வீட்டு சற்லைற்
சன் ரீவி மட்டும்தான் தரும்
ரி ஆர் ரி தரமறுக்கின்றது..காரணம்
நீ.. தூரம் இருப்பதால்


-------
இரு பெயர் ஒன்றா
கியது!
------------

அழகு என்ற சொல்லால்
காதல் உருவாகியது
இளமை என்ற சொல்லால்
இன்பம் உருவாகியது
ஆனால்..
எனது மூண்றெழுத்து கொண்ட
பெயரோடு
உனது நான்எழுத்துகொண்ட பெயர் இணைந்து
ஏழுஸ்வரங்காளாகி
இசை என்ற இன்ப வாழ்கை தொடங்கியது
----------

இன்ப வீணை
நீ.

இன்பம் என்ற நான்கு எழுத்தால்
துன்பம் என்ற நான்கெழுத்தை என்
வாழ்வில் இருந்து வெளியேற்றியவன் நீ....
இசை என்ற இரண்டெழுத்தால்
காதல் என்ற முன்று முடிச்சு
இன்ப வீணையாக என்னை உலகிற்கு
அறிமுகமாக்கியவன் நீ..
என் மீது கொண்ட அன்பின் வேதத்தால்
நான் செய்யும் குறும்பகளை
நீ..எறும்பாக இருந்து வழி நடத்துகின்றாய் சீராக.

கொத்தி எடுக்கின்றாய்

------------------------------

தென்றாலாய் வந்து மயிலிறகால்
மனம் தடிவி களவாடிச்சென்றாய்
வதக்கி எடுக்கின்றாய்
வெந்து வெதும்பகின்றேன்
செதுக்கி எடுக்கின்றாய்
சிற்பமாய் ஆகிவிட்டுகின்றேன்
உனது வாடிக்கை வரவில் வேடிக்கை
காட்டி தூரத்து வின்மீனாய்
என்கண்ளை மட்டும் கொத்தி எடுக்கின்றாய்

No comments:

Post a Comment